தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு!

Published

on

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது பைகளுக்குத் தட்டுப்படு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அண்மையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பையை மீண்டும் கையிலே எடுப்போம் என அறிவித்த தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பையும் ஜனவரி 4-ம் தேதி முதல் வழங்கி வருகிறது.

ஆனால் பல ரேஷன் கடைகளில் இந்த பரிசு தொகுப்பு பைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சர்ச்சை ஆனது. இது குறித்து முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, ஓமிக்ரான், கொரோனா தொற்று காரணமாகப் பை தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் தாங்களே பைகளைக் கொண்டு வந்து பொருட்களை வாங்கிக்கொள்ள விருப்பம் இருந்தால் வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு, பச்சரிசி 1 கிலோ, பாசிப்பருப்பு 500 கிராம், வெல்லம் 1 கிலோ, மிளகாய்த்தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கோதுமை மாவு 1 கிலோ, ஏலக்காய் 10 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், ரவை 1 கிலோ, முந்திரி 50 கிராம், நெய் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், உப்பு 500 கிராம், திராட்சை 50 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version