தமிழ்நாடு

757 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு: எதற்கு தெரியுமா?

Published

on

தமிழக அரசு விரைவில் 757 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக அரசு தமிழகத்தில் பதவி ஏற்றது என்பது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் அந்த திட்டங்கள் அனைத்துமே பொதுமக்களால் மற்றும் அரசியல் தலைவர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மட்டுமின்றி அவரது அமைச்சர்களும் சுறு சுறுப்பாக பணியை செய்து வருகின்றனர். குறிப்பாக சேகர்பாபு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன் உள்பட பல அமைச்சர்கள் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும்போது ஆரம்பித்து வைத்த திட்டம் தாலிக்கு தங்கம் என்ற திட்டம். இந்த திட்டம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயிர்ப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக 757 கிலோ தங்கத்தை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

வரும் 2021-22 திருமண உதவித்திட்டத்தின் கீழ் 94,700 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக 757 கிலோ தங்கத்தை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version