தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக்கல்வித் துறை!

Published

on

தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் தனியார், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்தத் தனியார் பள்ளிகளில் சில அரசு சொன்ன 75 சதவீத கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முதல் தவணையாக 40 சதவீத கல்வி கட்டணத்தையும், 2வது தவணையாக 35 சதவீதம் என மொத்தம் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முதல் தவணை 40 சதவீத கல்விக் கட்டணத்தைச் செலுத்த பெற்றோர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலும், மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்பு செலுத்தினால் போதும்.

மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தைக் கொரோனா தொற்றின் நிலையைப் பொறுத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version