தமிழ்நாடு

மூன்று மாதங்களில் ரூ.4,000: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி ரூ.4000 இரண்டு தவணைகளில் 2000 ரூபாயாக வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 14 வகை மளிகை பொருட்களும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது என்பதும், இந்த பணம் மற்றும் மளிகை பொருட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்கள் வாங்காதவர்கள் இந்த மாதத்திற்குள் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இன்னும் மூன்று மாதங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் அல்லது அடையாள அட்டைகள் இல்லாத மூன்றாம் பாலினத்தவர் நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் இன்னும் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மூன்றாம் பாலினத்தவர்கள் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் தொகை, மொத்தமாக ரூபாய் 4000 வழங்கப்படுமா? அல்லது 2 ஆயிரம் என் இரண்டு முறை பிரித்து வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version