தமிழ்நாடு

தமிழக அரசு பொங்கல் பரிசாக கொடுக்கும் 20 பொருட்கள்: முழு விபரங்கள்

Published

on

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 20 பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 2022ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்

இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பை 215,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

seithichurul

Trending

Exit mobile version