தமிழ்நாடு
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்த 3 குழுக்களை அமைத்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருந்தார்.
இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் முக்கிய கோரிக்கைகள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றைச் செயல்படுத்த 3 குழுக்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இந்த குழுக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை நிறைவேற்றுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாப் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.