தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இன்று பிரமாண பத்திரம் தாக்கல்

Published

on

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விக்கு இன்று பதில் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு நேற்று தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது என்பதும் திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் இதில் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிடென்ட் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து இயற்றப்பட்ட தீர்மானங்களை அடுத்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட் இன்று இந்த வழக்கை விசாரணை செய்யும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்யக் கூடாது என்ற நிபந்தனை உள்பட ஒருசில நிபந்தனைகளை தமிழக அரசு விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version