தமிழ்நாடு

தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு: 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

Published

on

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கபடுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்கள் அதாவது ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளிகளில் தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 10 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு விபரங்கள் இதோ:

 

Trending

Exit mobile version