தமிழ்நாடு

வேதா நிலைய வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் இடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நினைவு இல்லமாக்க அனுமதி இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு மற்றும் நீதிபதி சேஷசாயி அமர்வு உத்தரவிட்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் இந்த விளக்கத்தை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version