தமிழ்நாடு

மகப்பேறு விடுமுறைக்கு வீட்டு வாடகை கிடையாதா? அரசாணை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம்!

Published

on

மகப்பேறு விடுமுறையின் போது ஆறு மாதத்திற்கு வீட்டு வாடகை படி வழங்கப்படமாட்டாது என அரசாணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், மகப்பேறு விடுமுறைக்கான ஆறு மாதத்திற்கும் வீட்டு வாடகை படி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

அடிப்படை விதிகளில் விதி 44இன் கீழ் அறிவுறுத்தங்களில் 4(b)இல் “ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதி உடையவர்.

இந்நிலையில் அரசாணை (நிலை) எண்.89, மனிதவள மேலாண்மைத்துறை அடிப்படை விதி 101(a)ன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு ஒரு சிறப்பு சலுகை என்பதால் மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்.

அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் 4(b)இல் ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதியுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி திருத்தத்தின் மூலம் மகப்பேறு விடுப்பின்போது பெண் அரசு ஊழியர்கள் அவ்விடுப்புக்காலம் முழுமைக்கும் தடையின்று வீட்டுவாடகைப்படி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version