தமிழ்நாடு

அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அடுத்த ஷாக்.. அகவிலைப்படி உயர்வும் கட்!

Published

on

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படியை நிறுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் படியே அகவிலைப்படி. தற்போது தமிழக அரசு ஊழியர்கள் 17 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.

அடுத்த ஆண்டும் ஜூலை மாதம் வரை இதே அகவிலைப்படி விகிதம் தொடரும். இடையில் அகவிலைப்படி உயர்வு ஏதும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை அப்படியே தமிழக அரசும் பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://seithichurul.com/news/tamilnadu/shocking-news-to-tn-employees-earned-leaves-pay-cut-for-one-year/22459/

https://seithichurul.com/business/central-govt-freezes-da-of-staff-at-current-level-till-june-2021-to-save-rs-37500-cr/22375/

seithichurul

Trending

Exit mobile version