தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு பாதுகாப்புடன் நடக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது நடக்குமா? என்ற கேள்விக்கு இன்று காலையே விடை தெரிந்து விட்டது. பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு செய்முறை தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளதை அடுத்து பிளஸ் டூ தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டது.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ எழுத்துத் தேர்வும் நடைபெறும் என்றும் தேர்வை பாதுகாப்பாக நடத்த அறிவுறுத்தியும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக பிளஸ் டூ தேர்வு நடைபெறும் என்றும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பெரும் இடைவெளி விட்டு அமர்ந்து தேர்வை எழுத வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் சானிடைசர் வசதி செய்யப்படும் என்றும் அனைவரும் முக கவசம் அணிந்து தேர்வு அறைக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும் பிளஸ் டூ தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version