தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றி அமைப்பு! தமிழக அரசு உத்தரவு!

Published

on

கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை அரசு மருத்துவமனையில் கிடைக்காததை அடுத்து பலர் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகள் தங்கள் இஷ்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்காக கட்டணம் நிர்ணயம் செய்தனர் என்பதும் லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயம் செய்ததை அடுத்து தமிழக அரசே தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறைந்து உள்ளதை அடுத்து கொரோனா வைரஸ் சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு தற்போது மாற்றி அமைத்து இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதன்படி தீவிரமில்லாத ஆக்சிஜன் இல்லாத படுக்கைக்கு தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் ஒரு நாள் கட்டணமாக ரூபாய் 3000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கட்டணம் ரூபாய் 7000 கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை கட்டணமாக வசூல் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வென்டிலேட்டர் உடன் கூடிய சிகிச்சைக்கு தினசரி ரூபாய் 15,000 கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றி அமைக்கப்பட்ட இந்த கட்டணத்தில் இருந்து அதிகமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் இருந்து கட்டணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version