செய்திகள்

நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படாது – தமிழக அரசு அறிவிப்பு…

Published

on

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது.

எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா படிப்படியாக குறைந்தது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழே சென்றது.

ஆனாலும், தனியார் பார்கள் செயல்பட அனுமதி மறுப்பு, பேருந்துகள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, கேரள மாநிலத்திற்கு பேருந்து செல்ல அனுமதி மறுப்பு என சில கட்டுப்பாடுகள் அமூலில் இருந்தது.

குறிப்பாக பள்ளிகள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால், எல்.கே.ஜி. யுகேஜி, நர்சரி பள்ளிகள் மற்றும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியானது. நவம்பர் 15ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 1ம் தேதி முதல் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேநேரம், எல்.கே.ஜி. யுகேஜி, நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெளிவு படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version