தமிழ்நாடு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்: தமிழக அரசின் அரசாணை!

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு அதனை ஏற்றுக்கொண்டு தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் உயிரிழண்ட்ர்ஹ மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்த நிலையில் தற்போது மேலும் ரூபாய் 8.5 கோடி ரூபாய் நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி கொரோனாவால் பல்யான 34 பேர்களின் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த அரசாணையில் கொரோனாவால் பலியான 34 மருத்துவர்களின் பெயர்களையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் பலியான 34 மருத்துவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version