சினிமா

தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு: விருது பெற்ற பிரபலங்கள் யார் யார்?

Published

on

தமிழக அரசின் கலைமாமணி விருது பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐசரி கணேஷ், தாணு உள்பட பலரின் பெயர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டின் கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ:

நடிகை சரோஜாதேவி, நடிகை சௌகார் ஜானகி, நடிகை ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார், தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா, இயக்குனர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி,

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version