தமிழ்நாடு

அரசு, தனியார் மருத்துவமனைகளின் காலி படுக்கைகளின் விபரம்: அரசு வெளியிட்ட இணையதள முகவரி

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் காலிப்படுக்கைள் இல்லாமல் இருப்பது ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் காலி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காலி படுக்கைகளின் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த இணையதளத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காலி படுக்கைகளை விவரங்களை http://tncovidbeds.tnega.org என்னும் வலைதளத்தின் மூலம் ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள், ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் காலியாக உள்ள படுக்கைகளில் விவரத்தை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version