தமிழ்நாடு

சிறந்த இதழியாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

சிறந்த இதழியாளர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு ஏற்பட்டதிலிருந்து எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் எழுத்தாளர்களுக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கலைஞர் எழுதுகோல் விருது என்ற விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சமூக மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்த விருது ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து இதழியலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதி உதவி செய்யும் என்றும் சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார். மேலும் பணியின்போது இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு உதவி தொகையாக ரூபாய் 5 லட்சம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழில் தகுதியை மேம்படுத்திக் கொள்ள பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கைகள் அறிவிப்பின் போது தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version