தமிழ்நாடு

மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களினால் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 24-ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த முழு ஊரடங்கின் போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் மாறிவிட்டதால் இதற்கான தடை தொடரும். வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமானங்களுக்கு பயணிகள் சென்றுவர பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version