தமிழ்நாடு

தீபாவளிக்கு இந்த இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

Published

on

சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சென்ற ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் நேரம் ஒதுக்கி வருகின்றன.

அப்படி 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி, நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

இந்த நேரக் கட்டுப்பாட்டின் படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கான கட்டுப்பாட்டை முறையாகக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு தந்து, பாதுகாப்பாகப் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகளை மீறினால், சென்ற ஆண்டு போல காவல் துறை வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறபப்டுகிறது.

பட்டாசு வெடிக்கப் பலவேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், குறைவான பட்டாசுக் கடைகளே விற்பனைக்கு அனுமதி கோரியுள்ளன. எனவே பட்டாசு விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version