செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Published

on

ஜனவரி 10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

எனவே, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்து முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

1 – மழலையர், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை
2 – 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் கிடையாது. 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் செயல்படும்.
3 – திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி
4 – பொது போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகளுக்கு மிகாமல் பயணிக்க அனுமதி
5 – அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
6 – மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
7 – உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பேருடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி
8 – யோகா பயிற்சி நிலையங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத பேருக்கு அனுமதி
9 – விளையாட்டுகள், உடற்பயிற்சி கூடங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி
10 – பொழுதுபோக்கு/கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
11 – துணிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
12 – உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதி, உறைவிடங்களில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி
13 – வழிபாட்டு தலங்களுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும்
14 – அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் ஒத்தி வைப்பு

என புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகிறது. எனவே, மீண்டும் ஊரடங்கு காலம் திரும்பிவிடுமோ என்கிற கலக்கம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version