தமிழ்நாடு

நூலகத்திற்கு அனுமதி: தமிழக அரசு உத்தரவு

Published

on

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க அனுமதி என்ற தகவல் வெளிவந்து உள்ளதால் நூலக பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேருந்துகள், ரயில்கள், கடைகள், மால்கள் உள்பட அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்பது தெரிந்ததே. திரையரங்குகள் கல்லூரிகள் பள்ளிகள் மட்டுமே இன்னும் திறக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் நூலகத்துக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version