தமிழ்நாடு

குடிமகன்களுக்கு ஒரு பேட் நியூஸ்.. மதுக்கடைகள் மூட உத்தரவு!

Published

on

தமிழக அரசு இந்த மாதத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி.மோகன், மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அரசு சார்பில்  சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- பின்வரும் நாட்களில் முக்கிய தலைவர்களின் நினைவு நாள் மற்றும் குடியரசு தின விழா ஆகிய  விழாக்கள்  கொண்டாடப்பட  உள்ளதால் சமூக ஒழுங்கு முறைகளை கருத்தில் கொண்டு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த ‘பார்’கள் மூடப்பட வேண்டும்.

‘பார்’கள் மூடப்பட வேண்டிய நாட்கள்

  •   15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம்
  • 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம்
  • 28-ந் தேதி (வியாழக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள்

அது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகள் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த ‘பார்களில் உத்தரவுகளை மீறாத வகையில் கண்கணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

 இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த ‘பார்’கள் மூடப்படுகின்றது.

Trending

Exit mobile version