தமிழ்நாடு

பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் குறைக்கப்படுமா?

Published

on

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 20 சதவீதத்தை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்படுவது வழக்கம். தொலைதூரத்தில் வேலை செய்பவர்கள், கல்வி பயில்பவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் இந்த சிறப்பு பேருந்துகள் மூலமாக தத்தம் ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவர்.கடந்த ஆண்டு மொத்தமாக 30 ஆயிரம் பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட்டன.

கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டடுள்ளதால் சிறப்பு பேருந்தை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையின் போது மக்கள் மிகக்குறைந்த அளவே சிறப்பு பேருந்தை பயன்படுத்தினர்.

இதனை அடிப்படையாக கொண்டு இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 20 சதவீதத்தை தற்காலிகமாக குறைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இது பற்றி போக்குவரத்து அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைகள் முடிந்த பின்பு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version