தமிழ்நாடு

இந்த ரேஷன் அட்டைதாரருக்கு தான் குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய்: வெளியான தகவல்!

Published

on

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு ஆட்சியை பிடித்தது திமுக. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பு மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பதாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

#image_title

எதிர்க்கட்சிகளும் திமுகவை இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளதை விமர்சித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதில், திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். குறிப்பாக மகளிருக்கான மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த 1000 ரூபாய் கிடைக்கும். வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் போன்றவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது. புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் குடும்பத்துக்கும் இந்த தொகை கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version