தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மணிகே இத்தனை சதவிகிதமா? 70ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் 9 மணிவரை 13.58 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் 11 மணி வரை தமிழகத்தில் 26.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே ரீதியில் வாக்குபதிவு சென்றால் இன்று இரவு 7 மணிக்குள் 70 முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்கள் இல்லாத நிலையில் புதியதாக முதல் முறையாக முதல்வர் வேட்பாளர்களாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமன்றி கமல்ஹாசன், டிடிவி தினகரன் சீமான் ஆகியவர்களை சேர்த்து 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

மேலும் இந்த முறை இளைய தலைமுறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருவதால் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வாக்குகளின் சதவிகிதம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

சென்னை – 23.67%

நெல்லை – 20.98%

நாமக்கல் – 28.33%

திருவள்ளூர் – 18.77%

கிருஷ்ணகிரி – 32.00%

விழுப்புரம் – 22.99%

விருதுநகர் – 22.55%

Trending

Exit mobile version