செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்துக்கு கூடுதல் நேரம்… தேர்தல் ஆணையம் புதிய தளர்வு….

Published

on

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கவுள்ளது.

ஆனால், இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது வாக்கு சேகரிப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், சாலை நிகழ்ச்சிகள், சைக்கிள் பேரணி.. பாதயாத்திரை மற்றும் ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளது.

இது வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version