தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்

Published

on

தமிழகத்தில் 5 மாவட்டங்களி்ல், 17 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் போடப்பட உள்ள நிலையில், இதற்கான ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி, பூந்தமல்லி, நீலகிரி என 5 முக்கிய இடங்களில் உள்ள 17 மையங்களில் இந்த ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 25 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில், ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 9.15 மணிக்கு ஒத்திகை தொடங்கப்பட்டு, 11.15 மணிக்கு முடிந்தது. அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே தடுப்பூசி பயன்பாடு வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் ஒத்திகை முடிந்த பிறகு, இன்னும் ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவலியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பின்பு இரண்டாம் கட்டமாக, காவல்துறையினர், ராணுவத்தினர், ஊர்காவல்படையினர், பேரிடர் மேலாண்மைத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இறுதியாகவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version