தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் வெளியீடு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை 10 மணிக்கு கபசுர குடிநீர், 11 மணிக்கு வேகவைத்த சுண்டல் மற்றும் எழுமிச்சை சாறு வழங்குகின்றார்கள்.

மதியம் 1 மணிக்குச் சாதம், சாம்பார், ரசம், முட்டை வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் காபி, பிஸ்கட், இரவு 7 மணிக்கு வாழைப்பழம், இரவு 8 மணிக்குச் சாதம், சாம்பார், ரசம், பொரியல், இரவு 10 மணிக்குச் சிறிதளவு பூண்டு பால் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளன.

மேலும் இது ரம்ஜான் நோம்பு மாதம் என்பதால், நோம்பு உள்ளவர்களுக்குக் காலை 4 மணிக்கு ரோட்டி, பிஸ்கேட், 4:30 மணிக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 7 மணிக்குப் பால் மற்றும் வாழைப்பழம், இரவு 9:30-க்கு சாப்பாடு, 10 மணிக்குப் பூண்டு பால் வழங்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version