தமிழ்நாடு

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை அதிகரிப்பு!

Published

on

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்.

மாநில திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாடு முழுவதும் 1543 அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

TN CM’s Free Breakfast Scheme Pushed Up Attendance Level in Govt Schools : Planning Commission

அதில் 1319 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கும் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் மாணவர்கள் 100 சதவீதம் வரை பள்ளிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 98.5 சதவிகிதமாகவும், கரூர் மாவட்டத்தில் 97.4 சதவீதமாகவும், நீலகிரி மாவட்டத்தில் 96.8 சதவிகிதமாகவும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

1086 பள்ளிகளில் மாணவர்கள் வருகை 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 22 பள்ளிகளில் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு அரசு திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version