தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே பொங்கல் விடுமுறைக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு குறித்த முழு தகவல்கள் இதோ:

 

seithichurul

Trending

Exit mobile version