தமிழ்நாடு

டெல்லி வரை செல்வார் குஷ்பு, எனவே ஓட்டு போடுங்கள்: முதல்வர் பிரச்சாரம்

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பிரச்சாரம் செய்தார்.

குஷ்பு மிகச்சிறந்த திறமையானவர் என்றும் பேச்சாளர் என்றும் அவரை எம்எல்ஏவாக தேர்வு செய்தால் உங்கள் கோரிக்கைகளை டெல்லி வரை கொண்டு சென்று உரிமையுடன் பெற்றுத் தருவார் என்றும் முதல்வர் கூறினார்.

திரைப்படத்தில் நட்சத்திரமாக ஜொலித்த குஷ்பூ அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பதாகவும் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக வழங்கியுள்ளது என்றும் அவருக்கு ஓட்டு போட்டால் அவர் உங்கள் கோரிக்கைகளை டெல்லி வரை சென்று உரிமையுடன் பெற்று தருவார் என்றும் கூறினார்.

மேலும் மத்திய அரசின் அனுமதியும் நிதியும் கிடைத்தால்தான் ஒரு சில திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்றும் அதனை குஷ்பு போராடிப் பெற்றுத் தருகிற திறமையான வேட்பாளர் என்றும் அவர் கூறினார்.

குஷ்புவை வெற்றிபெறச் செய்தால் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித் தருவார் என்றும் எனவே அவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version