தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதி ரூ.2000 என்று முதல் வழங்கப்படும்? எத்தனை மணி வரையில்? டோக்கன் எப்படி?

Published

on

கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மே 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற உடன் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறிவந்தார்.

அதை உறுதி செய்யும் வகையில் வெள்ளிக்கிழமை முதல்வர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதற்கு முதல் கையெழுத்தைப் போட்டார்.

தொடர்ந்து மே 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலிலிருந்தாலும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையில் மட்டும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும். ஒரு நாளுக்கு 200 நபர்கள் என்ற விதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version