தமிழ்நாடு

‘அத்தனை உதவிகளையும் செய்வோம்’- ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!

Published

on

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடச் செல்லும் தமிழக வீரர்கள், வீராங்கணைகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்னும் ஒரு வார காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து வீரர்கள், வீராங்கணைகள் டோக்யோ செல்கின்ற்னர். பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்களும் இந்த வீரர், வீராங்கணைகள் உடன் தினமும் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று தமிழக மு.க.ஸ்டாலின் இந்த போட்டியாளர்கள் உடன் கானொளி மூலம் கலந்து உரையாடினார். முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “டோக்கியோ சென்றி வெற்றி வாகை சூடி பதக்கங்கள் உடன் தாய்நாடு திரும்ப வேண்டும். போட்டியாளர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் இந்த அரசு செய்யும். அனைவரும் வெற்றிப் பதக்கங்களை வாரிக் குவிக்க வேண்டும்” என்றார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர், “இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன். வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தி மகிழ்ந்தேன். தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன்” எனப் பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version