தமிழ்நாடு
ஒரே விமானத்தில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்.. அடி தூள்..!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, பசும்பொன் கிராமத்தின் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே விமானத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
ஒரே விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இருவரும் செல்வது, இதுவே முதல் முறை என்றும், பயணத்தின் போது இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வார்களாக என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.