தமிழ்நாடு

தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: முதல்வர் பழனிசாமி

Published

on

தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 4-ம் தேதி தமிழக திரை அரங்குகளில் 100 சதவீதம் வரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்குத் திரை உலகினர் பலரும் ஆதரவு அளித்தனர். ஆனால் மருத்துவர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் இது விவாதப்பொருளானது. மத்திய அரசும் தமிழக அரசு 100 சதவீத திரை அரங்குகள் திறக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

தொடர்ந்து திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதிலும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்துக்குச் சற்று ஆறுதல் செய்தியாகச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version