தமிழ்நாடு

இன்னும் 5 நாட்களில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம்..!- பாஜக குஷ்பூ

Published

on

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்னும் 5 நாட்களில் பாஜக தனது தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அந்தக் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக புதுச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் பிரசாரம் செய்து வருகிறார். அரசியல் மேடையில் பேசிய குஷ்பூ, “இன்னும் ஐந்தே நாட்களில் தமிழக முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கான பதிலை பாஜக அறிவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் மட்டுமல்லாது புதுவையிலும் பாஜக தலைமையிலான கூட்டணியே அமையும். பாஜக வெற்றி பெறப் போவதை நினைத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பயத்தில் உள்ளனர். பாஜக குறித்து திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் தவறான பிரசாரங்களை செய்து வருகின்றனர். தமிழத்தில் அதிமுக- பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

Trending

Exit mobile version