தமிழ்நாடு

நவம்பர் 10 முதல் திரை அரங்குகள் திறக்க அனுமதி; தீபாவளிக்குப் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுமா?

Published

on

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் ஒரு இருக்கைக்கும் அடுத்த இருக்கைக்கும் இடையில் ஒரு இருக்கை காலியாக இருக்கும்.

நவம்பர் 14-ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு 4 நாட்கள் முன்னதாகவே திரை அரங்குகள் திறக்கப்பட உள்ளன.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் திரை அரங்குகளை, புதுப்படங்கள் வெளியாகி அலங்கரிக்கும். தற்போது பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகிக் காத்திருப்பில் உள்ளன.

பெரிய நடிகர்கள் படங்கள் திரை அரங்கில் வெளியாக வாய்ப்பில்ல என்று கூறப்படும் நிலையில், சிறிய நடிகர்களின் படங்களின் தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு நாளை முதல் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version