தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் ரூ.5-க்கு மாஸ்க்!

Published

on

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது மாஸ்க் இல்லை என்றால் 5 ரூபாய்க்கு மாஸ்க் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிலிருந்து செப்டம்பர் 1 முதல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர் பேருந்து நிலையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், “பேருந்தில் பயணிக்க வரும் பயணிகளிடம் மாஸ்க் இல்லை என்றால், நடத்துநரிடம் இருந்து 5 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க் மட்டுமல்லாமல், சானிடைசர், கையுறை, கண்ணாடி முகத் திரைகளும் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version