தமிழ்நாடு

நேற்று மின்மினி பூச்சி… இன்று கண்ணாமூச்சி: எடப்பாடி பழனிசாமியின் பார்வையில் தமிழக பட்ஜெட்!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

#image_title

இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இந்த இரண்டு பட்ஜெட்டுகளையும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மின்மினி பூச்சி, கண்ணாமூச்சி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.

நேற்று தாக்கல் ஆன தமிழக நிதிநிலை பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மக்களை ஏமாற்றி பிழைப்பதையே தொழிலாக கொண்ட விடியா திமுக அரசின் இந்த பட்ஜெட் நாட்டிற்கு எந்தவித வெளிச்சத்தையும் தராத மின்மினி பூச்சியாக பார்க்கப்படுகிறது. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இந்த பட்ஜெட் எந்தவித வெளிச்சத்தையும் தராது. இது ஒரு கானல் நீர். மக்களின் தாகம் தீர்க்காது என்றார்.

இந்நிலையில் இன்று தாக்கல் ஆன தமிழக வேளான் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள். வேளாண் பெருங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக எந்த புதிய திட்டமும் இல்லாதது வேதனை அளிக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகள் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version