தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என்பதும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது குறித்தும் பட்ஜெட் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.

மேலும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் அதிரடி அறிவிப்புகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என செய்திகள் வெளியாகிஉள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் நேரத்தில் மக்கள் வருமானமின்றி திண்டாடி வரும் நிலையில் தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வந்து, ஏழை எளிய மக்களின் வயிற்றில் பால் வார்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version