தமிழ்நாடு

தமிழக பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு சஸ்பெண்ட்!

Published

on

தமிழக பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மீது ஏற்பட்ட அதிருப்தியில், திமுகவிலிருந்து விலகி தேசிய கட்சியான பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சூர்யா சிவா திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அண்ணாமலையிடம் நெருக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜகவின் ஓபிசி அணையில் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சூர்யா சிவாவிற்கும் பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணுக்கு இடையே நடந்த தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் சூர்யா சிவா மற்றும் டெய்சி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் கடுமையான ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சூர்யா சிவா டெய்சிக்கு கொலை மிரட்டலும் விடுத்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சூர்யா சிவாவின் இந்த பேச்சுக்கு பாஜக மட்டுமல்லாமல் பிற கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.

அதற்கான விசாரணை இன்று திருச்சி – பல்லடம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, செயலாளர் மலர் கொடி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணையில் சூர்யா சிவா தான் செய்த தவரை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், தமிழக பாஜகவிலிருந்து சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யபெண்ட் செய்யப்படுகிறார். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா ஒரு தொண்டனாகக் கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version