தமிழ்நாடு

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது… இதுவே தமிழக பாஜக நிலைப்பாடு- அண்ணாமலை

Published

on

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜக-வின் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று பெரம்பலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பாஜக-வின் நிலைப்பாடு. தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரை முறையாகத் தர வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தான் தமிழக பாஜக-வின் நிலைப்பாடு.

காங்கிரஸ் கட்சி தான் இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டு செயல்படுகிறது. தற்போதைய சூழலில் மேகதாது அணை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை விவகாரத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவாகரத்தில் கட்சி பேதம் இன்றி பாஜக பேசியுள்ளது என கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version