தமிழ்நாடு

தேர்தல் தேதியை மாற்ற தமிழக பிஷப் கவுன்சில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!

Published

on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் இந்தியா முழுமைக்கும் நடக்க உள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக ரம்ஜான் பண்டிகை மாதத்தில் காலை முதல் மாலை வரை இஸ்லாமியர்கள் நோன்பிருப்பார்கள் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதே நேரத்தில் ஏப்ரல் 8 முதல் 22 வரை மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரை தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவும் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் கிறிஸ்தவர்கள் சார்பிலும் இந்த தேர்தல் தேதியை மாற்றியமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதியன்று கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதற்கு முன்னர் ஏப்ரல் 18-ஆம் தேதி அவர்கள் பெரிய வியாழன் தினத்தை கொண்டாடுகின்றனர். தொடர்ந்து ஏப்ரல் 19-ஆம் தேதி இயேசு உயிர்விட்ட பெரிய வெள்ளி தினமும் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த தேர்தல் தேதியை மாற்றி அமைக்க தமிழக பிஷப் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version