தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் Vs ஸ்டாலின், செந்தில் பாலாஜி: சட்டசபையில் இன்று நடந்த சுவாரஸ்யம்!

Published

on

தமிழக சட்டசபையில் இன்று மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது சர்ச்சை வெடித்தது.

செந்தில் பாலாஜி தான் பேசியபோது, நான் யாரிடமும் கும்பிட்டோ, குழந்தை போல தவழ்ந்தோ பதவி பெறவில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் எதிர்காலம் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஆரம்பிக்க, அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது எழுந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கட்சி மாறியிருக்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். குனிந்து கும்பிடு போடுவதை பற்றியெல்லாம் அவர் பேசக் கூடாது என்றார். மேலும் செந்தில் பாலாஜி, முன்னர் ஸ்டாலின் பற்றி பேசியதை குறிப்பிட்டுக் காட்டினார். இதனையடுத்து செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்தார்.

அப்போது ஸ்டாலின், கட்சி மாறுவதையும் அணி மாறுவதையும் பற்றி பேசும் நீங்கள், உங்கள் பக்கத்தில் இருக்கும் துணை முதல்வர் தர்ம யுத்த காலத்தில் பேசியதை எல்லாம் பேசுவீர்களா? என கேட்டார். இதற்கு உடனே எழுந்து பதில் அளித்த ஓபிஎஸ், நான் பதவிக்காக கட்சி மாறவில்லை. என் கட்சிக்குள் தர்மயுத்தம் செய்தேன். செந்தில்பாலாஜியின் கால்களில் ஸ்கேட்டிங் சக்கரங்கள் கட்டியிருக்கிறார். அவர் ஓடிக் கொண்டே இருப்பார். அவரது காலில் உள்ள ஸ்கேட்டிங் சக்கரத்தை முதலில் கழற்றி வைக்கச் சொல்லுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி இப்போது போன இடத்திலாவது விசுவாசமாக இருக்கட்டும் என்றார்.

Trending

Exit mobile version