தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சிகளுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு..!

Published

on

2021-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

டிடிவி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அவர்களது வெற்றிச் சின்னமான குக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒதுக்கிய அதே பேட்டரி டார்ச் சின்னம் இந்த முறை இல்லை. டார்ச் லைட் இல்லையென்றால் கலங்கரை விளக்காவோம் என்று கமல் தெரிவித்துள்ளார்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் அவருக்கான சின்னம், கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிடும் முன்பு தெரியவரும்.

Trending

Exit mobile version