தமிழ்நாடு

பழனிசாமிக்கு முதல்வர் பதவி எப்படி கிடைத்தது தெரியுமா? இதோ அவரே சொல்கிறார்

Published

on

முதல்வர் என்ற பதவி தனக்கு கடவுள் அருளால் கிடைத்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தவன். கிராமத்தில் வளர்ந்தவன். அரசுப்பள்ளியில் படித்தவன். 6 முதல் 11 வரைக்கும் அரசு பள்ளியிலேயே படித்தேன்.

அரசுப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்களாக தான் இருப்பார்கள். எனவே அப்படிபட்ட மாணவர்களின் எண்ணங்கள் எனக்கு தெரியும்.

அதன் காரணமாகவே, என்னுடைய அரசு, அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு கொடுத்து, அவர்களின் மருத்துவ கனவை நனவாக்குகிறது.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது பற்றி பேசுகிறார்கள். எனக்கு முதல்வர் என்ற பதவி, கடவுளின் அருளால் தான் கிடைத்தது. அம்மாவின் அரசு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version