தமிழ்நாடு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Published

on

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று (16/07/2020) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “மார்ச் 2020-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று http://tnresults.nic.in/ இணையதளத்தில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாகவும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் எத்தனை மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக காலை 9:30 மணியளிவில் பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகும்.

seithichurul

Trending

Exit mobile version