தமிழ்நாடு

இன்று 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

Published

on

தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதற்கான மதிப்பெண் கணக்கிடும் முறையும் அண்மையில் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 2020-2021 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 11 முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் https://tnresults.nic.in/ என்ற இணையதளம் மூலமாகக் கிடைக்கும். மாதிரி மதிப்பெண் சான்றிதழ் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகக் கிடைக்கும்.

Trending

Exit mobile version