தமிழ்நாடு

இரண்டு மாத சிகிச்சைப் பலனின்றி த.மா.கா துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்..!

Published

on

தமிழ் மாநிலக் கட்சியின் துணைத் தலைவர் ஆகப் பதவி வகித்து வந்த ஞானதேசிகன் இன்று காலமானார்.

கடந்த நவம்பர் மாதம் மாரடைப்பின் காரணமாக ஞானதேசிகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் மாரடைப்புக்கான சிகிச்சைப் பெற்று தேறி வந்த ஞானதேசிகன் கொரோனாவால் கடுமையான உடல் நலப் பிரச்னைகளை சந்தித்தார். இரண்டு மாதங்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனாவால் உடல் நலம் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞானதேசிகனுக்கு உடல் நலம் மேலும் மோசம் அடைந்தது. இதனால் உடனடியாக அவசரப் பிரிவு சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். ஆனால்,ம் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று ஞானதேசிகன் காலமானார். இவருக்கு வயது 71.

ஞானதேசிகன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். தமிழகத்தில் இருந்து இரண்டு முறைகள் மாநிலங்களவைக்குத் தேந்தெடுக்கப்பட்டும் உள்ளார்.

Trending

Exit mobile version